/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/actor_0.jpg)
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மலையாள நடிகர் வினோத் தாமஸ் (45). இவர் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும், ஹேப்பி வெட்டிங், வாசி, நதொலி ஒரு செறிய மீனலா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில், நேற்று (18-11-23) இரவு இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், பம்படி பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் வளாகத்தில் நேற்று வெகு நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதில் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், அந்த கார் நின்று கொண்டிருந்த இடத்தை பார்த்தனர். அப்போது, அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் பூட்டப்பட்டு இருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரியவந்தது. உடனே, அவர்கள் அந்த கார் கண்ணாடியை தட்டி பார்த்த போது உள்ளிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், அந்த கார் கண்ணாடியை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு காருக்குள் நடிகர் வினோத் தாமஸ் இருந்ததை பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர் உணர்வற்ற நிலையில் இருந்ததால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் நடிகர் ஒருவர் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)