Skip to main content

பாம்பை விட்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள்... கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

jk

 

கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். 27 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது ருத்ராவிடம் 784 கிராம் தங்க நகைகள், கார் உள்ளிட்டவற்றை அவர் வரதட்சணையாக வாங்கியுள்ளார். திருமணம் ஆகி சில மாதங்களிலேயே அவருக்கு வேறொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர், பாம்பை வைத்து மனைவியைக் கொன்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தார். இதற்காக யூடியூப்பில் அதிக விஷம் கொண்ட பாம்பு எது என்று பல நாட்கள் பார்த்துள்ளார். அதில் ஒரு பாம்பை இறுதிசெய்த அவர், பாம்பு பிடிக்கும் நபரிடம் தனக்கு இதுபோல் ஒரு பாம்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். பாம்பு பிடிப்பவரும் அதே மாதிரியான பாம்பைப் பிடித்து அவரிடம் கொடுத்துள்ளார். அதை மனைவி வீட்டில் இருக்கும்போது அவருக்கு அருகில் தூக்கிப்போட்டுள்ளார். பாம்பு பின்புறமாக வந்து அவரின் காலை கடித்துள்ளது. 

 

இதில் நிலைகுலைந்த அவர் கத்தியுள்ளார். எப்படியும் மனைவி இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், அவரை மருத்துவமனைக்கு சூரஜ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 40 நாட்கள் இருந்த அவரின் மனைவி பிழைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சூரஜ், மீண்டும் ஒரு பாம்பை வாங்கி, மாமனார் வீட்டிற்குப் போயிருந்த மனைவியைக் கொல்ல, அங்கேயே சென்று பாம்பை அவர் தூங்கும்போது அவர் அருகில் வீசியுள்ளார். பாம்பு கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து மகளைப் பாம்பு கடித்ததால் சந்தேகமடைந்த ருத்ராவின் பெற்றோர், போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை விசாரித்த அவர்கள், சூரஜ்தான் இந்த வேலைக்குக் காரணம் எனக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை,  நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு குற்றவாளி என்று உறுதிசெய்து தண்டனை விவரத்தை இன்று (13.10.2021) அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்புக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது.

 

fg

 

 

சார்ந்த செய்திகள்