Skip to main content

திருவனந்தபுரத்தில் கரோனா சமூக பரவலாக மாறியுள்ளது! - பினராயி விஜயன் தகவல்!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020
bh

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. 

 

மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,275 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 722 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை நோய் தொற்று காரணமாக 37 பேர் பலியாகியுள்ளனர். நோய் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,862 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த நோய்தொற்று தற்போது மூன்றிலக்கத்திற்கு நகர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை 100, 300, 500 என மின்னல் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்