/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/408_13.jpg)
காஷ்மீரில் தீவிரவாதிகளால் 4 பேர் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ராஜவுரி மாவட்டத்தில் டாங்கரி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்குள் நேற்று இரவு 7 மணியளவில் சில தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். ஒவ்வொரு வீடுகளாகச் சென்று வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி அவர்களது ஆதார் அட்டைகளை வாங்கி சரி பார்த்தனர்.
அவ்வாறு சரிபார்த்ததில் மூன்று வீடுகளில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வசித்தது தெரிய வந்தது. மூன்று வீடுகளில் வசித்தவர்களைக் கண்மூடித்தனமாகத்தீவிரவாதிகள் சுட்டனர். இத்தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக கிராமத்திற்கு வந்து தீவிரவாதிகளைத்தேடும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா போன்றவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)