Skip to main content

குறையும் கரோனா தொற்று... மகிழ்ச்சியில் கர்நாடக அரசு!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

fgh

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கர்நாடகாவில் கரோனா பாதிப்பு அதிகமாக  இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது.  

 

இன்று மட்டும் கர்நாடகாவில் 2,576 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 8,334 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 7,77,595 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,28,640 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 44,805 ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 29 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 11,121 பேர் பலியாகியுள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.