கர்நாடக அரசியலில் அடிக்கடி அரசியல் கட்சியினர் வேறொரு கட்சிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் . கடந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக குமாரசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மக்களவை தேர்தல் முடிந்த பிறகு கர்நாடகவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து புதிய முதல்வராக எடியூரப்பா வருவார் என்று பாஜக தலைவர்கள் கூறிவருகிறார்கள் என்றும் கூட்டணி ஆட்சியை கவிழும் சக்தி யாருக்கும் கிடையாது என்றும் குமாரசாமி தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி பாஜவில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் யாரும் கவலை படவேண்டியது இல்லை அடிக்கடி அரசியல் கட்சி தாவுபவர்களை நாம் இழுத்து புடித்து வைக்க வேண்டியதில்லை என்றும் கூறினார் . பின்பு கூட்டணி கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம் என்று பாஜ நினைக்கிறது. நாங்கள் என்ன வேடிக்கை பார்த்து கொண்டிருப்போமா? பாஜவில் உள்ள எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் என்ன செய்ய நினைத்தாலும் நாங்களும் அதை அவர்களுக்கு திருப்பி செய்வோம் என்றும் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.