karnataka higher education minister

Advertisment

இந்திய அரசு, நாட்டில் கல்வியைமேம்படுத்துவதற்காகபுதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய கல்விக்கொள்கைக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில்கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைக் கர்நாடகஉயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயண் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கையைஅமல்படுத்த உத்தரவு பிறப்பித்த முதல் மாநிலம் கர்நாடகா என்றும் அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

கர்நாடக அரசின் இந்த உத்தரவையடுத்து, 2021 - 22 கல்வியாண்டிலேயேபுதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.