Skip to main content

ராகுல் தகுதி நீக்கம்; எடியூரப்பா வீடு தாக்குதல்; பரபரப்பான சூழலில் வெளியான கர்நாடக தேர்தல் தேதி அறிவிப்பு 

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Karnataka election date notification released

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

 

Karnataka election date notification released

 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீடு மீது பஞ்சாரா சமூகத்தினர், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  

 

இப்படியான பரபரப்பு சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது. 

 

Karnataka election date notification released

 

அதேபோல், கடந்த 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கர்நாடக மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, தாவணகெரே பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “கர்நாடகாவை கட்சிக்காரர்களின் ஏடிஎம் மெஷினாக கருதுகிறது காங்கிரஸ்” என்று கூறியிருந்தார்.

 

 

இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று காலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

 

Karnataka election date notification released

 

அதன்படி, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப். 13 ஆம் தேதி தொடங்கி ஏப். 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு மீதான பரிசீலனை ஏப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப். 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே. 10 ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணத்தில் திடீர் சந்தேகம்; தனி அறைக்கு கூட்டிச்சென்று டவுட் கேட்ட ராமதாஸ்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Sudden doubt in the document; Ramdas went to a private room and asked for a dowt

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில்  நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.

நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பாமக-பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சில நிமிடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி ஒப்பந்தத்திற்கான ஆவணத்தை படித்துப் பார்க்கையில், அதில் அவருக்கு சில சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து விளக்கம் கேட்க பாஜக தலைவரை தனி அறைக்கு பாமக ராமதாஸ் கூட்டிச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மக்களவை தேர்தலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.