Skip to main content

விரைவில் நலம்பெறுவார் கலைஞர்- கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்

Published on 28/07/2018 | Edited on 28/07/2018

 

 

pinayi

 

 

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரிலும், ட்விட்டரில் நலம் விசாரித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் விரைவில் நலம்பெற்று திரும்புவார் என  கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''கலைஞர் கருணாநிதி போராடவே பிறந்தவர். அவர் தன் உடல்நலம் குறைவிலிருந்து போராடி கண்டிப்பாக விரைவில் உடல்நலம் பெற்று திரும்புவார். விரைவில் நலம் பெற பிராத்திக்கிறேன்'' எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்