Published on 31/12/2018 | Edited on 31/12/2018
![dfxvsdx](http://image.nakkheeran.in/cdn/farfuture/t_ZNB7pXY-Piug98XWyT-OYM2DKBEsEaV-ZCgDrm0qA/1546273408/sites/default/files/inline-images/vdm--in.jpg)
தமிழகத்தை கஜா புயல் தாக்கி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் இதற்கான நிவாரண தொகையை மத்திய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. நிவாரணம் வழங்கக் கோரி தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் 1146.13 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. புயல் சேதங்கள் குறித்த அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏற்கனவே மத்திய அரசு 353 கோடி ரூபாய் நிவாரணமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு 15,000 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் இதுவரை 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.