Skip to main content

தெலங்கானா அரசியலில் பரபரப்பு: மத்திய உள்துறை அமைச்சருடன் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

 

 

Junior NTR meeting with Union Home Minister Amit Shah!- Sensation in Telangana politics!

 

ஜூனியர் என்டிஆர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து உரையாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தெலங்கானா மாநிலத்தில் முணுக்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜ்கோபால் ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஹைதராபாத்தில் ஜூனியர் என்டிஆர் சந்தித்துப் பேசினார். பின்னர், இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். 

 

20 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என்றும் அமித்ஷா பாராட்டியுள்ளார். 

 

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மத்திய அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து, விமர்சித்து வரும் நிலையில் அமித்ஷா- ஜூனியர் என்டிஆரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் அரசியலில் இறங்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !