
பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்த மரத்தினை ஜேசிபி இயந்திரம் கொண்டு சாய்த்தபொழுது அதிலிருந்த பறவைகள் மரத்தோடு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியநிலையில் மரத்தினை வெட்டிய ஜேசிபி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் தலப்பாறை, வி.கே.பாடியில் உள்ள மரம் ஒன்றில் பறவைகள் அதிகமாக வசித்து வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு மரத்தை அகற்றும்பணி நடைபெற்றது. அப்பொழுது 'சடார்' என்று மரம் கீழே விழ, மரத்தில் தங்கி இருந்த பறவைகள் 'பட பட' வென பறந்து சென்றன. இருப்பினும் பல பறவைகள் பறக்க முடியாமல் மரத்துடன் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தன. சாலையிலேயே பறவைகள் குவியல் குவியலாகஇறந்து கிடக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் அந்த மரத்தினை வெட்டிய ஒப்பந்ததாரர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மரத்தை வெட்டி அகற்றிய ஜேசிபி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜேசிபி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/mida3MZwcAM.jpg?itok=kWCUACPD","video_url":" Video (Responsive, autoplaying)."]}
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)