Published on 24/10/2021 | Edited on 24/10/2021
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம், உத்தம்பூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சாலை முழுவதும் ஐஸ்கட்டிகள் சிதறிக் கிடந்தன. அதிவேகத்துடன் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆலங்கட்டி மழையால் நெற்பயிர்கள் வீணாகி விடும் என்று விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். அதேபோல், மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளை சீரமைப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.