Skip to main content

“கல்லூரி பட்டம் பெறாதவர் மகாத்மா காந்தி...” - காஷ்மீர் ஆளுநர்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

jammu kashmir governor talks about gandhiji educational qualification

 

மகாத்மா காந்தி சட்டம் தொடர்பாக எந்த பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறவில்லை என ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பேசி உள்ளார்.

 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி படிக்கவில்லை என்று யாராவது சொல்லுவார்களா. அவ்வாறு சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. காந்தி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர் அல்ல. பெரும்பான்மையான மக்கள், காந்தி சட்டப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் சட்டப் படிப்பு தொடர்பாக பட்டம் பெற்றவரில்லை. அவர் பள்ளிப் படிப்பில் டிப்ளமோ வரை மட்டுமே படித்தவர். ஆனால், வழக்கறிஞராக வாதாடும் அளவுக்கு தகுதி பெற்றிருந்தார். இந்த தகவல் படித்த நிறைய பேருக்கு தெரியவில்லை" எனப் பேசினார்.

 

இதற்கு முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல குறைந்த கல்வித் தகுதி கொண்ட பிரதமரால் சாத்தியமாகுமா. தற்போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்நிலையில் உங்கள் முன் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். குறைந்த கல்வித் தகுதி கொண்ட பிரதமரால் 21 ஆம் நூற்றாண்டில் முன்னேறிய இந்தியாவை உருவாக்க முடியுமா. இந்தியப் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். நமக்குப் படித்த பிரதமர் கிடைத்து இருந்தால் அவர் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக பல பள்ளிகளை திறந்திருப்பார். நாட்டின் பிரதமர் படிக்காதது குறித்து நான் கவலைப்படுகிறேன்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.