Published on 19/08/2022 | Edited on 19/08/2022

மத்திய அரசால் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் ஜல் ஜீவன். இத்திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீர் வசதி வழங்குவதே நோக்கம் என பிரதமரால் கூறப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 52%க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு தண்ணீர் வசதி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
இன்று காணொளி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர், "சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் 3 கோடி குடும்பங்களுக்கு கிடைத்த குடிநீர், தற்போது ஜல் ஜீவன் செயல் படுத்தப்பட்ட 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்திய நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள் குடிநீர் குழாய் வசதியை பெற்றுள்ளது. இது அரசுக்கு கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.