குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று பாஜக கூட்டணி சார்பில் துணைத் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜகதீப் தன்கர் பதவியேற்கும் விழா டெல்லி நடந்து வருகிறது. நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவியேற்றார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அமித்ஷா பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பொறுப்பேற்பு!
Advertisment