உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
![italy india peoples arrived india air india flight](http://image.nakkheeran.in/cdn/farfuture/QSxUD1Vf868Q76QxkM8i5lKUI2zhbFm6wXGGDJIJcjc/1584257138/sites/default/files/inline-images/italy444.jpg)
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவித்த 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர்: இதில் தமிழகத்தை சேர்ந்த 55 மாணவர்களும் அடங்குவர். நாடு திரும்பிய அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
![italy india peoples arrived india air india flight](http://image.nakkheeran.in/cdn/farfuture/cA5ttu2Vr0RWeeBVwnQA-EXLVvVJMHsC8niYgMey_w8/1584257150/sites/default/files/inline-images/italy55.jpg)
இதனிடையே ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹானி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அமெரிக்காவின் தடையால் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் உதவிக்காக காத்திருப்பதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.