Skip to main content

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி- 50!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

isro launched the plsv c50 rocket at sriharikota

சி.எம்.எஸ்- 01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி- 50 ராக்கெட். 

 

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி- 50 ராக்கெட். தகவல் தொடர்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டிற்காக சி.எம்.எஸ்-01 வடிவமைக்கப்பட்டுள்ளது. சி- பேண்ட் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்திய பரப்பு, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகளிலும் பயன்படுத்தலாம். 6 ஸ்ட்ராப் ஆன்ஸ் தொழில் நுட்பத்தில் அனுப்பப்படும் 22- வது பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் இதுவாகும். 

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் ஏவப்பட்ட இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் இதுவாகும். 

 

சார்ந்த செய்திகள்