Skip to main content

டெல்லியில் மின்சார பேருந்துகள் கொள்முதலில் முறைகேடு!

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

 

Irregularity in the purchase of electric buses in Delhi!


டெல்லியில் மின்சார பேருந்துகள் கொள்முதலில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

 

டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க, கடந்த 2019- ஆம் ஆண்டு 1,000 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த நிலையில், மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். 

 

மின்சார பேருந்துகளை வாங்கவும், பராமரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் சுமார் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக ஆளுநரின் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக, ஆய்வு செய்யுமாறு டெல்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். 

 

அதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கலாம் டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்த டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்