/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/irctc-1.jpg)
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ரயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ள இணையதளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் எனவும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் குறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்படின் ரயில்வே உதவி மையத்தைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் 14646,0755 - 6610661 & 0755-4090600 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மதியம் 12 மணியளவில் இருந்து சுமார் அரை மணி நேரமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)