ips sm

உத்தரபிரதேசத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர தாஸ் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர தாஸ். இவர் லக்னோவை பூர்விகமாக கொண்டவர். இவரது மனைவி மருத்துவராக இருக்கிறார். தற்போது பல்லியா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவர். குடும்ப பிரச்சனைக் காரணமாக சமீப காலமாக சோர்ந்து காணப்பட்டவர் இன்று காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சுவாச ஆதரவுக்காக வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை முன்னேற்றத்தில் அடுத்த 48 மணி நேரமானது மிக முக்கியமானதாகும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Advertisment