சர்வதேச யோகா தினம் இன்று (21/06/2020) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு இன்று (21/06/2020) காலை நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாளாக இது அமைந்துள்ளது. இந்த ஆண்டு குடும்பத்துடன் வீட்டில் இருந்தபடி யோகா செய்யுங்கள்,கரோனா பரவல் உள்ள நிலையில் யோகா கற்றுக்கொள்ள மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.கரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள்,யோகா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்களது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக யோகா செய்து பழகுங்கள்.
யோகாவின் பயன்களை முன் எப்போதும் இல்லாத வகையில் நாடு தற்போது உணர்ந்துள்ளது. கரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. பகவத் கீதையில்கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். கர்மாவுக்கும், யோகாவுக்கும் தொடர்புள்ளது,கர்மாவின் செயல்திறன்தான் யோகா.யோகா நிறம், மதம், இனம் உள்ளிட்ட பாகுபாடுகளை பார்க்காது; மனிதநேயத்தை பலப்படுத்தும்" என்றார்.