Skip to main content

"நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட என்னை அனுமதியுங்கள்"- ரத்ததில் கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

International-shooter-Vartika-Singh-about-nirbhaya-issue

 



இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதில் குற்றவாளி ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

பின்னர் மீதம் உள்ள அக்‌ஷ்ய், முகேஸ், பவான், வினய் சர்மா நான்கு குற்றவாளிகளுக்கும் 2017 ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும்நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், ரத்ததால் கடிதம் ஒன்றை எழுதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்