20 லட்சம் கோடியில் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு திட்டத்தின் முதல் கட்ட அறிவிப்புகளை நேற்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த திட்டத்திற்கான இரண்டாவது கட்ட அறிவிப்புகளை இன்று வெளியிட்ட்டுவருகிறார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் இன்று அறிவிக்கப்படுகிறது. 3 கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் கடனை செலுத்துவதற்கான காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கான திட்டங்கள் பின்னர் வெளியிடப்படும். விவசாயிகள் சிரமப்படாமல் இருக்கவே கடனை திரும்பச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன் 29 ஆயிரத்து 500 கோடி என்றார்.