Published on 16/11/2018 | Edited on 16/11/2018
இன்டெல் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக ரூ. 1,100 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு வெளியே இன்டெல் மேற்கொள்ளும் அதிகபட்ச முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.

44 ஏக்கரில், 6,20,000 சதுர அடியில் இந்த மையம் அமைக்க இருப்பதாகவும், அதில் 1,00,000 சதுர அடிக்கு உலகத்தரத்திலான ஆய்வுக கட்டமைப்பு அமைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.