Information released by Canada for Amit Shah linked to targeting of Sikh separatists?

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, கனடா நாட்டு குடிமகனான நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

Advertisment

அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வேளையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலை அமெரிக்க ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டதாக கனடா நாட்டு அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளதை தி அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் உறுதி செய்த தகவலை, தேசிய பாதுகாப்பு குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கூறியுள்ளார்.

அதில் கூறிய அவர், ‘வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் என்னை அழைத்து அவர், அந்த நபர் தானா என்று கேட்டார். ஆமாம், அவர்தான் என்று உறுதி செய்தி செய்தேன் என்று கூறினார். ஏற்கெனவே, இந்திய- கனடா இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, இந்த செய்தி மூலம், மேலும் உரசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Advertisment