இந்தியாவில் முதன் முதலாக யானைகளுக்கு என்று மருத்துவமனை உபியிலுள்ள மதுராவிட்டதில் இருக்கும் சும்முரா கிராமத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் வையர்லெஸ் எக்ஸ் ரே கருவி, டெண்டல் எக்ஸ் ரே கருவி, லேசர் சிகிச்சை கருவி, ஹைட்ரோ தெரபி, தெர்மல் இமேஜிங் போன்றஅதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அந்த கிராமத்திலுள்ள யானைகள் சரணாலயத்தில் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் காயம்பட்ட, உடல் சரியில்லாத மற்றும் வயது முதிர்ந்த யானைகளை பார்த்துகொள்ளும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சைக்கு வருகின்ற யானைகளை தூக்கும் அளவுக்கு மிந்தூக்கியும் இங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்டகாலம் மருத்துவமனையிலேயே தங்கி யானைகள் சிகிச்சை பெறுவதற்கு என்று பெரிய கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் பயிலும் மருத்துவ மானவர்களுக்கு யானைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது போன்ற வகுப்புகளும் இந்த மருத்துவமனையில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் ஓ எஸ் என்னும் என் ஜிஓ நிறுவனம் கடந்த 2010ல் யானைகள் காப்பகத்தை தொடங்கியது. அதன் பின்னர் இங்கு 20 யானைகளை பராமறித்து வருகிறது. இந்நிலையில் யானைகளுக்காக இந்தியாவிலேயே முதல் மருத்துவமனையை திறந்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.