Published on 24/01/2022 | Edited on 24/01/2022
இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செஸ் 500 புள்ளிகள் வரை கீழ் இறங்கி 59,000 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. இதே போல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 150 புள்ளிகள் வரை குறைந்து 17,000 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்து வர்த்தகமானது. சர்வதேச சந்தைகளின் சூழலையொட்டியே, இந்திய சந்தைகளிலும் சரிவு காணப்படுவதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 88.70 டாலராக அதிகரித்துள்ளது.