
இந்திய வானிலை மையம், வடக்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லியிலுள்ள இந்திய வானிலை மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்று மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.