இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குப் பரவலாக செலுத்தப்பட்டுவருகிறது. இத்தடுப்பூசிகளைத் தவிர ஸ்புட்னிக் v, மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஸைடஸ் கடிலா என்ற மூன்று டோஸ்களைக் கொண்ட கரோனா தடுப்பூசிக்கும் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில், இந்தியாவின் பயோலொஜிக்கல் - இ நிறுவனம் தயாரித்துவரும் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்துள்ளார்.
மேலும், பயோலொஜிக்கல் - இ தடுப்பூசியை 5 - 18 வயதான குழந்தைகள் மீது பரிசோதிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயோலொஜிக்கல் - இ நிறுவனத்தின் 30 கோடி தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முன்பணமாக 1,500 கோடியை ஏற்கனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.