Skip to main content

கவலையளிக்கும் பட்டியலில் இந்திய வகை கரோனா - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

world health oraganisation

 

இந்தியாவில் கரோனா  பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதுவரை லட்சக்கணக்கான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் முதன்முதலில் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸை, உலக சுகாதர நிறுவனம் கவலையளிக்கும் வைரஸ் பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், "இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு  மாற்றமடைந்த கரோனா, வேகமாக பரவுவதாக தெரிகிறது. எனவே இதனை நாங்கள், உலக அளவில் கவலையளிக்கும் கரோனா வைரஸாக வகைப்படுத்துகிறோம். மேலும், முதற்கட்ட ஆய்வுகளில், இந்த வகை கரோனா மீது நோய் எதிர்ப்புசக்தி குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது" என கூறியுள்ளது.

 

இருப்பினும் தற்போதுள்ள தரவுகளின்படி, கரோனா தடுப்பூசிகள், இந்த வகை வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் எனவும், இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பதைத் தடுக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

 

ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் பிரேசில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்க வகை கரோனாக்களைக் கவலையளிக்கும் கரோனா வைரஸ் பட்டியலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்