Skip to main content

இந்தியாவில் 40 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கரோனா பாதிப்பு

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

corona

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் மூன்றாவது கரோனா அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 379 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில், கரோனாவிலிருந்து 11,007 பேர் குணடமடைந்துள்ளதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் 1892 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 568 பேருக்கும், டெல்லியில் 382 பேருக்கும், கேரளாவில் 185 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 1892 பேரில், 766 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 100 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்