இந்தியாவில் கரோனாபாதிப்பு மோசமடைந்துள்ளது. கரோனாபரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாபரவல் கட்டுக்குள் வராமல் இருக்கிறது. இதனையடுத்துகரோனாபரவலை தடுக்க ஊரடங்கு குறித்து பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம், மத்திய மாநில அரசுகளுக்குப் பரிந்துரைத்தது. ராகுல் காந்தியும் கரோனாவை கட்டுப்படுத்த முழு முடக்கமேதீர்வு எனதெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவில் நேற்று (05.05.2021) ஒரேநாளில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும், கரோனாபாதிக்கப்பட்ட 3,980 பேர் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் கரோனாவிலிருந்துகுணமாகியுள்ளனர். கரோனாவால்அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் தமிழகம் உள்ளது.மஹாராஷ்ட்ராவில் 4,880,542 பேரும், கேரளாவில் 1,743,932 பேரும், கர்நாடகாவில் 1,741,046 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 1,399,348 பேரும், தமிழ்நாட்டில் 1,272,602 பேரும் கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர்.