இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. கரோனா பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தினசரி மூன்று லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று (27.04.2021) ஒரே நாளில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3,293 பேர் கரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 2 லட்சத்து ஆயிரத்தி 187 பேர் பலியாகியுள்ளனர்.