Skip to main content

10 லட்சம் பேருக்கு வெறும் 180 ஏ.டி.எம். மெஷின்கள்! - இதுதான் வளர்ச்சியா?

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தபோது ஸ்மார்ட் சிட்டிகளை அமைத்து இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இனி பலவீனமான பணப்பரிவர்த்தனைகளைத் தவிர்த்துவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என்று வலியுறுத்தியது மத்திய அரசு. 

 

atm

 

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை அறிமுகம் செய்தார். ஊழல் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்கும் இந்த முடிவை அனைவரும் ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான வேலைகளில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தினார். 

 

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் பணப்புழக்கம் 99% இருப்பதாக இருப்பதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. அந்தளவிற்கு பணமதிப்பு இழப்பு தோற்றுப்போய்விட்டது என்பதை நாட்டின் பணப்பரிவர்த்தனை உணர்த்தியது.

 

இந்நிலையில், ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தின் தகவல்படி, இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வெறும் 180 ஏ.டி.எம். இயந்திரங்களே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய மக்கள்தொகைக்கு போதுமான அளவு ஏ.டி.எம். இயந்திரங்கள் இன்னமும் அமைக்கப்படவில்லை என அந்தத் தகவல் கூறுகிறது. இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கொரியா - 2,423, கனடா - 1,859, பிரான்ஸ் - 1,745 ஆகிய நாடுகள் உள்ளன. 

சார்ந்த செய்திகள்