
கரோனா பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவையை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தடை விதித்த இந்தியா, அத்தடையை அவ்வப்போது நீட்டித்து வந்தது. இந்தநிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம், சர்வதேச விமான சேவைக்கான தடையை டிசம்பர் மாதத்தில் நீக்க முடிவு செய்தது.
ஆனால் அதேநேரத்தில் ஒமிக்ரான் பரவல் தொடங்கியதால், விமான சேவைக்கான தடையை நீக்குவதற்கான முடிவை இந்திய அரசு கைவிட்டது. இந்தநிலையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவுடன் ஏர் பபுள் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகளுக்கு விமான சேவை தொடரும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.