இந்தியாவில் ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இந்திய நிறுவனங்கள் ஸ்புட்னிக் v தடுப்பூசியையும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியையும்தயாரித்து வருகின்றன. ஸ்புட்னிக் v தடுப்பூசியின் காம்போனென்ட் - 1 என்பதுதான் ஸ்புட்னிக் லைட் என்றாலும், அதற்கு இன்னும் இந்தியாவில் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில்ஹெடெரோ பயோஃபார்மா லிமிடெட், ஏற்கனவே 2 மில்லியன் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளைத் தயாரித்து விட்டது. இருப்பினும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி வழங்கப்பட்டதால், அது இந்தியாவில் பயன்பாட்டிற்குவருவதற்குள்காலாவதியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துஇந்தியாவிற்கான ரஷ்யத் தூதர்நிக்கோலய் குடாஷேவ், இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுவதற்குள்தடுப்பூசியின் ஆறு மாத பயன்பாட்டுக் காலம் முடிந்து தடுப்பூசி காலாவதியாகும் நிலை ஏற்படலாம். அதனால் தடுப்பூசிகள் வீணாகும் என்பதால்ஹெடெரோ பயோஃபார்மா லிமிடெட் தயாரித்த ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில்ரஷ்யத் தூதரின்வேண்டுகோளைஏற்று, மத்திய அரசு 40 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யஹெடெரோ பயோஃபார்மா லிமிடெடுக்குஅனுமதி அளித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.