இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் V, மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அரசு, பைசர் நிறுவனத்துடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. பைசர் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
பைசர் நிறுவனமும், இந்தியாவில் தங்களது தடுப்பூசிக்கு அனுமதி வாங்குவதில் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், அரசுடனான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வோம் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்குமாறு அந்த நிறுவனத்தை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் இரண்டு முறை கடிதம் வாயிலாக வலியுறுத்தியும், தடுப்பூசிக்கு அனுமதி கோரி பைசர் நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.