Published on 23/03/2020 | Edited on 23/03/2020
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 17,493 பேரின் சளி, ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 415 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18 லிருந்து 29 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.