Skip to main content

‌‌‌ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

India buys crude oil from Russia!

 

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் கட்டுப்படுத்தாது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 

 

ரஷ்யா - உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், அதை ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் வாங்க இந்தியா முனைந்துள்ளது. இதில் முதற்கட்டமாக 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே விரைவில் இறுதிச் செய்யப்படவுள்ளது. 

 

ரஷ்யா வழங்கும் கச்சா எண்ணெய் விலை சந்தை விலையை விட பீப்பாய்க்கு 20 முதல் 25 டாலர்கள் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தாங்கள் விதித்துள்ள பொருளாதார தடைகள் கட்டுப்படுத்தாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

 

எனினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. அதிருப்தி தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை, இந்தியா எடுத்துள்ளது என்று கருத தோன்றும் என அவர் கூறியுள்ளார். 

 

இதனிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மூன்று வாரங்களுக்கு பின் 100 டாலருக்கு கீழே குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்