india bans 118 more chinese apps

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சீனாவுக்கான பொருளாதார ரீதியிலான பதிலடியாக இதனைக் கூறிவரும் மத்திய அரசு தற்போது, மேலும் 118 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், லுடோ வேர்ல்ட், வீசாட், பப்ஜி உள்ளிட்ட செயலிகளும் அடங்கியுள்ளன. இந்தியாவில் 18 கோடி பேர் பப்ஜி விளையாட்டைப் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், இந்த விளையாட்டுக்கு அடிமையாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

Advertisment