Skip to main content

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை - கையெழுத்தான ஒப்பந்தம்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

BRAHMOS

 

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்து வருகின்றன. உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸை கப்பல்,  நீர் மூழ்கி கப்பல், விமானம், நிலம் ஆகியவற்றிலிருந்து ஏவ முடியும். இந்தநிலையில் இந்த ஏவுகணையை விற்பனை தொடர்பாக பிலிப்பைன்ஸும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் பிலிப்பைன்ஸ் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க இந்தியாவிற்கு ஆர்டர் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான 375 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் இந்தியாவும்,  பிலிப்பைன்ஸும் கையெழுத்திட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா, மேலும் சில நாடுகளுடனும்  பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தற்போது பிரம்மோஸ் 2 என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்