இலங்கைக்கு இந்தியா இதற்கு முன் 44000 டன் யூரியா உரம் வழங்கியிருந்த நிலையில் மீண்டும் இந்தியா சார்பில் இலங்கைக்கு உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங் இலங்கையில் அம்பந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்திருந்தது. இதற்கு இந்தியாவில் பல்வேறு தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்தியா இலங்கைக்கு முதற்கட்டமாக 44000 டன் யூரியா உரம் வழங்கியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இந்திய மீண்டும் இலங்கைக்கு மீண்டும் 21000 டன் உரத்தொகுப்பு வழங்கியுள்ளது. இந்த உரத்தொகுப்பை இலங்கை தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர் "இலங்கை உடனான நட்பையும் ஒத்துழைப்பையும் தங்கள் உதவி மேம்படுத்தும்" என கூறியுள்ளார்.