சமையல் எரிவாயு உருளையை இனி வாட்ஸப் மூலமே முன்பதிவு செய்துகொள்ளலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

indane gas cylinder bookings to be done by whatsapp also

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வீடுகளுக்கு தேவையான சிலிண்டர்கள் இதுவரை தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி வாட்ஸப் மூலமும் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (தமிழகம் மற்றும் புதுவை) நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன் கூறுகையில், "தமிழகத்தில் 2.38 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 1.36 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ள சூழலில், இனி வாட்ஸப் மூலமும் இதனை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

சிலிண்டர் விநியோகஸ்தரிடம் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 7588888824 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பி வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், விநியோகிக்கப்பட்ட சிலிண்டர் சரியான கட்டணத்தில், சரியான எடை மற்றும் சீல் ஆகியவற்றுடன் கிடைக்கப்பெற்றதா எனவும், விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை கிடைக்கப்பெறுகிறதா எனவும் வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யலாம்" என்று தெரிவித்தார்.