கேரளாவில் சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண்களின் தொடா் தற்கொலை மரணம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இளம்பெண் மருத்துவரை ஒருதலை காதலால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அதே துப்பாக்கியால் அந்த வாலிபரும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூா் நாரகத்து பகுதியை சோ்ந்த போலீஸ் டிராபிக் மாதவன் மற்றும் ஆசிாியையான சபினா தம்பதியின் மகள் மானஸா (24). இவர் கொச்சி கோதமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படித்து விட்டு அங்கு தற்போது பயிற்சி மருத்துவராக பணிபுாிந்து வந்தார்.
இந்தநிலையில் கண்ணூர் தலச்சோியை சேர்ந்த விற்பனைக்காக செம்மீன்கள் வளர்த்து வரும் ரகுத்தமன் மற்றும் ரஜிதா தம்பதியினரின் மகன் ராகில்(32) எம்.பி.ஏ படிப்பு முடித்து விட்டு பிளைவுட் தொழில் செய்து வருகிறார். மானஸாவும் ராஹிலும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டதையடுத்து ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவா்களின் பழக்கம் நண்பர்களாக தினமும் நீடித்தது. இந்தநிலையில் ராஹிலின் பழக்கம் வழக்கத்தில் வித்தியாசம் ஏற்பட்டு அது மானஸாவுக்கு பிடிக்காமல் போக உடனே ராஹிலின் தொடர்பை துண்டித்தார் மானஸா.
இதனால் ஆத்திரமடைந்த ராஹில் அவரை தினமும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல் வழியாக என்னை காதலி என்னை திருமணம் செய்துகொள் என தொந்தரவு செய்து வந்தான். இதனால் மானஸா கண்ணூா் சிற்றி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ராஹிலை எச்சரித்து அனுப்பினார்கள். இது ராஹிலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மானஸா கோதமங்கலத்தில் தங்கியிருந்த விடுதியின் அருகில் உள்ள இன்னொரு விடுதியில் ராஹில் அறையில் எடுத்து தங்கியிருத்து மானஸாவை நோட்டமிட்டான்.
இந்தநிலையில் 30-ம் தேதி மானஸா மதியம் தனது தோழிகளுடன் அறையில் சாப்பிட்டு கொண்டியிருந்த போது திடீரென்று அங்கு நுழைந்த ராஹில் தன்னுடன் பேசவா என மானஸாவை அழைத்துள்ளான் .அதற்கு கோபபட்ட மானஸா வெளியே போ என விரட்டியுள்ளார். இருந்தாலும் உன்னிடம் கடைசியாக பேச வேண்டும் நீ வா என அடுத்து இருந்த அறைக்குள் அழைத்தான். அதை நம்பி உள்ளே சென்ற மானஸாவை பதுக்கி வைத்தியிருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டான் ராஹில். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மானஸா துடிதுடித்து இறந்தார். அதைத்தொடர்ந்து தன்னை தானே தனது நெற்றில் வைத்து சுட்டான் ராஹில். இதில் குண்டு துளைத்து பாிதாபமாக அவனும் இறந்தான்.
இது குறித்து கோதமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பரின் உடலையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு ராஹிலுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.