The incident happened to the woman by doctor for came for treatment in west bengal

மேற்கு வங்க மாநிலம், வடக்கு பர்கானாஸில் உள்ள ஹஸ்னாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவருடைய கணவர், பீகாரில் வேலை பார்த்து வருகிறார். மேற்கு வங்கத்தில் வசித்து வந்த அந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் சர்தார் (40) என்ற மருத்துவர் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

Advertisment

அங்கு சென்ற அவருக்கு, சிகிச்சை அளித்த சர்தார், அந்த பெண்ணிற்கு மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து சர்தாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், தனது செல்போனில் எடுத்து வைத்திருந்த அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

ஒரு கட்டத்தில், தனக்கு 4 லட்ச ரூபாய் தரவேண்டும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று சர்தார் அந்த பெண்ணிடம் மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன, அந்த பெண் சர்தார் கேட்ட 4 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பெண்ணை பலமுறை அச்சுறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.