Incident Happened in Uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், இட்டாஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமாகாந்த். இவரது மனைவி அல்கா தேவி (42). கடந்த 5ஆம் தேதி வீட்டை வெளியே சென்ற அல்கா தேவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த ரமாகாந்த், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்கா தேவியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில், அடுத்த நாள் அல்கா தேவியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அல்கா தேவியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

Advertisment

அல்கா தேவியின் 17 வயது மகள், அகிலேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அல்கா தேவிக்கு தெரியவர, அகிலேஷ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால், அகிலேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது. 2 மாதங்களுக்கு முன்பு அகிலேஷ் சிறையில் இருந்து வெளியே வந்ததால், தனது மகளை உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

Advertisment

அங்கு சென்ற அந்த பெண், வேறு ஒரு நபரை காதலித்து வருவதாக அல்கா தேவிக்கு தெரியவந்தது. மகளின் நடத்தை மீது கோபமடைந்த அல்கா தேவி, தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். இதனால், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த சுபாஷ் சிங் என்பவரை அணுகி, ரூ.50,000 பணம் கொடுத்து மகளை கொலை செய்ய சொல்லியிருக்கிறார். உறவினர் வீட்டுக்கு சென்ற மகள், சுபாஷ் சிங்கை தான் காதலித்திருக்கிறார் என்பது தெரியாமலேயே, காதலனிடமே மகளை கொலை செய்ய அல்கா தேவி சொல்லியிருக்கிறார். இது பற்றி சுபாஷ் சிங், அல்கா தேவியின் மகளின் தகவல் தெரிவித்தார். ஆனால், சுபாஷ் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய அந்த பெண், தனது அம்மா அல்கா தேவியை கொலை செய்ய சுபாஷ் சிங்கிடம் வற்புறுத்தியிருக்கிறாள்.

அதன்படி, மகளை கொலை செய்துவிட்டதாகக் கூறி போலியான புகைப்படங்களை அல்கா தேவிக்கு அனுப்பி நேரில் வருமாறு சுபாஷ் சிங் கூறியிருக்கிறான். இதனை நம்பிய அல்கா தேவி, ஆக்ராவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அல்கா தேவியை, சுபாஷ் சிங்கும், அந்த பெண்ணும் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கொலை செய்ய சொன்ன அம்மாவை, காதலன் உதவியுடன் மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment