அமெரிக்கா - கனடா எல்லையில், கனடாவிற்கு சொந்தமான பகுதியில் கடுங்குளிரில் சிக்கி உறைந்த நிலையில் குழந்தை உட்பட நால்வரின் உடல்கள் ஜனவரி 19 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர்களிடம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, நடைபெற்ற தேர்தல் வேட்டையில் நால்வரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இறந்த நால்வரின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்தவர்கள் நால்வரும் குஜராத் மாநிலம் டிங்குச்சா கிராமத்தை சேர்ந்த ஜகதீஷ் பல்தேவ்பாய் படேல் (39), வைஷாலிபென் ஜகதீஷ்குமார் படேல் (37), விஹாங்கி (11), தார்மிக் (3) என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே இறந்த குடும்பத்தின் உறவினரான ஜஷ்வந்த் படேல், இறந்த நால்வரின் இறுதி சடங்குகளையும் கனடாவிலேயே செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.