
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''எங்க கட்சியினுடைய போராட்டத்தை நாங்கள் தனியாக நடத்துவோம். திமுக அவர்களுடைய ஆர்ப்பாட்டம், போராட்டத்தை தனியாக நடத்துவார்கள். மதச்சார்பற்ற கூட்டணி என்று வந்து விட்டால் புதுச்சேரியில் காங்கிரஸ்தான் தலைமை. அப்படி இல்லை என்று சொன்னால் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் தனித்து நிற்பதற்கு தயார் என்று காங்கிரஸ் கூட்டத்திலேயே முடிவு செய்து விட்டோம். கட்சித் தொண்டர்களுடைய உணர்வை நாம் சொல்கிறோம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'அரசு பணியிடங்களை அரசு நிரப்பி கொண்டு வருகிறார்களே. ஆனால் நீங்கள் நிரப்ப வில்லை என்று சொல்கிறீர்களே? என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த நாராயணசாமி, ''அரசு பணியிடங்களை இந்த அரசு நிரப்பவில்லை. அவர்களுடைய பையை தான் நிரப்பி கொண்டிருக்கிறார்கள். கால் ஃபார் தான் பண்ணி இருக்கிறார்கள். நீ ரங்கசாமி பினாமி என்று எனக்கு தெரியும்'' என சொல்ல அனைவரும் சிரித்தனர். உடனே ''சாரி'' என்று சொல்லிவிட்டு 'எல்டிசி, யூடிசி, டீச்சர் கால் ஃபார் பண்ணி இருக்கிறார்கள். இவ்வளவு தான் நடந்துள்ளது. ரங்கசாமி தூங்கி எழுந்த உடனே பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொல்வார்'' என்றார்.