மத்திய அமைச்சர் உமாபாரதி அயொத்தியில் ராமர் கோவில் விரைவாக கட்டியே ஆகவேண்டும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் அதுவரை இந்து பிரதிநிதிகள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் உமாபாரதி, “ராமர் கோவில் கட்டப்பட்டே ஆக வேண்டும், இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று காட்டமாக பேசினார். நேற்று அயோத்தியில் பிராத்தனை செய்த உமாபாரதி, அதனையடுத்து இந்து பரிஷத் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸை சந்தித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து உமாபாரதி பேசியதாவது,
"ராமர் கோவில் விஷயத்தில் இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன். அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை உடனே நாம் ஆரம்பிக்க வேண்டும்.இப்போது முழு தேசமும் ராமர் கோவிலின் மாபெரும் கட்டுமானத்தைக் காண காத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது, நாம் அதை தவறவிட்டால், வரலாற்றில் பதிவு செய்யப்படும் பெருமையின் தருணத்தை நாம் இழந்து விடுவோம்," என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி அரசாங்கங்கள் நல்ல பெரும்பான்மையில் இருப்பதாகவும். இந்த நேரத்தில், நாடு முழுவதும் உள்ள ராமர் பக்தர்களின் லட்சியமான ராமர் கோவில் கட்டவேண்டும் என்று காத்திருப்பதாக அவர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.